தலைவர் தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய அதே மேடையில் நானும் தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சி: நடிகர் தனுஷ் பெருமிதம்.!

தினகரன்  தினகரன்
தலைவர் தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய அதே மேடையில் நானும் தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சி: நடிகர் தனுஷ் பெருமிதம்.!

டெல்லி: தாதா சாகேப் பால்கே’ விருதை என் தலைவர் வென்ற அதே மேடையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது விவரிக்க முடியாதது என்று விருது வென்ற நடிகர் தனுஷ் உற்சாகத்துடன் கூறியிருக்கிறார். 67-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்கள் மத்திய அரசால் விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்துக்கு \'தாதா சாகேப் பால்கே\' விருது வழங்கப்பட்டது. 45 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ’அசுரன்’ திரைப்படத்தில் நடித்த தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் ரஜினியும் தனுஷும் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “தாதா சாகேப் பால்கே விருதை என் தலைவர் வென்ற அதே மேடையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது விவரிக்க முடியாதது. இந்த கவுரவத்தை எனக்கு வழங்கிய தேசிய விருது ஜூரிக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை