கமலா ஹாரிஸின் இட்லி மீதான விருப்பம்; புத்தகத்தில் வெளியான தகவல்

தினமலர்  தினமலர்
கமலா ஹாரிஸின் இட்லி மீதான விருப்பம்; புத்தகத்தில் வெளியான தகவல்

வாஷிங்டன்-சிறு வயது முதல், அமெரிக்கா துணை அதிபராக பதவியேற்றது வரையிலான கமலா ஹாரிசின், 57, வாழ்க்கையை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.

இதில் கமலா அய்யர் என்ற பெயர், கமலா ஹாரிசாக மாறியது; இட்லி, தோசை மீதான அவரது விருப்பம் போன்ற விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க துணை அதிபராக இந்தாண்டு ஜன.,ல் பதவியேற்றார் கமலா ஹாரிஸ். ஆப்ரிக்க தந்தை, இந்திய தாய்க்கு பிறந்த அவர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

.கமலா ஹாரிசின் வாழ்க்கையை விளக்கும் வகையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரபல பத்திரிகையாளர் சித்தானந்த ராஜ்கட்டா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மொத்தம், 300 பக்கங்கள் உடைய இந்த புத்தகம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

கமலா ஹாரிசின் தாய் ஷியாமளா கோபாலன் தமிழகத்தைச் சேர்ந்தவர். படிப்பதற்காக அமெரிக்கா சென்ற அவர், உடன் படித்த ஆப்ரிக்காவைச் சேர்ந்த டொனால்டு ஹாரிசை திருமணம் செய்தார். அதே காலகட்டத்தில் ராஜ்கட்டாவின் தந்தையும் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றார்.

ஷியாமளா கோபாலனின் அமெரிக்க வாழ்க்கையில் துவங்கி, கமலா ஹாரிசின் சிறு வயது அனுபவங்கள், அவருடைய விருப்பங்கள் உள்ளிட்டவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.கமலா ஹாரிஸ் பிறந்த போது அவரது பிறப்பு சான்றிதழில், முதலில் கமலா அய்யர் ஹாரிஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின் அது கமலா தேவி ஹாரிஸ் என மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவலும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலாவின் சமையல் விருப்பம், இட்லி, தோசை மீதான காதல் போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அரசியலில் வெற்றி பெற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், போட்டிகள் குறித்து கமலா ஹாரிஸ் கூறியுள்ளவையும் இடம்பெற்றுள்ளது.

வாஷிங்டன்-சிறு வயது முதல், அமெரிக்கா துணை அதிபராக பதவியேற்றது வரையிலான கமலா ஹாரிசின், 57, வாழ்க்கையை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.nsimg2875313nsimgஇதில் கமலா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை