உ.பி.யில் 9 மருத்துவக் கல்லூரிகள், பிரதமரின் தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!!

தினகரன்  தினகரன்
உ.பி.யில் 9 மருத்துவக் கல்லூரிகள், பிரதமரின் தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!!

டெல்லி : உத்தரபிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சித்தார்த் நகரிலிருந்து  உத்தரப்பிரதேசத்தின் ஒன்பது மருத்துவக்  கல்லூரிகளைப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 1.15 மணிக்கு வாரணாசியில் பிரதமரின் தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தைப் பிரதமர் தொடங்கிவைப்பார். வாரணாசிக்கு ரூ.5200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைப்பார். தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டம் (பிஎம்எஎஸ்பிஒய்) என்பது நாடு முழுவதும் சுகாதார கவனிப்புக்கான அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இது தேசிய சுகாதார இயக்கத்திற்குக் கூடுதல் ஒன்றாக இருக்கும்.பிஎம்எஎஸ்பிஒய் - கீழ், சுகாதாரத்திற்கான ஒரு தேசிய கல்விக்கழகம்,  நுண்கிருமி ஆய்வுக்கான 4 புதிய தேசிய கல்விக்கழகங்கள், உலக சுகாதார அமைப்புக்கான தென்கிழக்கு ஆசிய பிராந்திய மண்டல ஆராய்ச்சி அமைப்பு, உயிரி பாதுகாப்பு மூன்றாம் நிலையில் 9 பரிசோதனைக்  கூடங்கள், நோய்  கட்டுப்பாட்டுக்கான 5   புதிய மண்டல தேசிய மையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஒன்பது மருத்துவக் கல்லூரிகள்  சித்தார்த் நகர், எட்டாவா, ஹர்தோய், பதேபூர், தியோரிய, காஜிப்பூர், மிர்சாபூர், ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. \'மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக்கல்லூரிகள் நிறுவுதல்\' என்ற மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின்கீழ் எட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கும், ஜாம்பூரில் மாநில அரசின் சொந்த நிதி ஆதாரங்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு மருத்துவக்கல்லுரிக்கும்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை