100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறுவது உண்மையில்லை!: சிவசேனா விமர்சனம்

தினகரன்  தினகரன்
100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறுவது உண்மையில்லை!: சிவசேனா விமர்சனம்

மும்பை: நாடு முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறுவது உண்மையில்லை என்று சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கொண்டாடுவதை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் போடப்பட்டிருக்கிறது என்ற ஒன்றிய அரசின் கூற்று உண்மை அல்ல என்று அவர் குற்றம்சாட்டினார். கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையை கணக்கிட்டது யார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி போட தகுதியுடைய குடிமக்களுக்கு இதுவரை 23 கோடி தடுப்பூசிகளுக்கு மேல் செலுத்தப்படவே இல்லை என்று சஞ்சய் ராவத் உறுதிபட கூறியுள்ளார். 100 கோடி டோஸ் போடப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறுவது தவறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை வெளியிடப்போவதாகும் அவர் அறிவித்துள்ளார். லடாக் அருணாச்சலப்பிரதேச எல்லையில் சீனா அச்சுறுத்தும் நிலையில், சாதிக்காத ஒன்றிற்காக உலா எடுப்பது சரியா? என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை