அரைசதம் விளாசினார் கோஹ்லி : பாக்.,கிற்கு இந்தியா 152 ரன் இலக்கு

தினமலர்  தினமலர்
அரைசதம் விளாசினார் கோஹ்லி : பாக்.,கிற்கு இந்தியா 152 ரன் இலக்கு

துபாய்:பாகிஸ்தானுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் மட்டும் எடுத்தது. கேப்டன் கோஹ்லி 57 ரன்கள் எடுத்தார்.'டி-20' உலக கோப்பை தொடரின் 7வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது.


முதல் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் தற்போது 12 அணிகள் தலா இரு குரூப்பாக பிரிக்கப்பட்டு, 'சூப்பர்-12' சுற்று போட்டிகள் நடக்கின்றன. 'குரூப்-2'ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் இந்திய அணியில் இஷான் கிஷான், அஷ்வின், ராகுல் சகார், ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி சேர்க்கப் பட வில்லை. இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை ஷகீன் அப்ரிதி வீசினார். 4வது பந்தில் ரோகித், எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். மீண்டும் வந்த அப்ரிதி, இம்முறை ராகுலை (3) போல்டாக்க இந்திய அணி 6 ரன்/2 விக்., என திணறியது. கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், அப்ரிதி பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவர் 11 ரன் எடுத்து அவுட்டானார்.
சூர்யகுமார், ஹசன் அலி 'வேகத்தில்' ரிஸ்வானிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேற இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மனம் தளராத கோஹ்லி, ஹசன் அலி பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். ரிஷாப், 39 ரன்னுக்கு அவுட்டானார்.


கோஹ்லி அரைசதம்


ஹாரிஸ் பந்தில் கோஹ்லி ஒரு பவுண்டரி அடித்து உதவ, 15 ஓவரில் இந்திய அணி 100/4 ரன் எடுத்தது. தொடர்ந்து ஹசன் அலி ஓவரில் 2 பவுண்டரி அடித்து கைகொடுத்த கோஹ்லி, 'டி-20' அரங்கில் 29 வது அரைசதம் எட்டினார். பந்துகளை வீணடித்த ஜடேஜா 13 ரன் (13 பந்து) எடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, அப்ரிதியின் 19 வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். இதே ஓவரின் 4 வது பந்தில் கோஹ்லி (57 ரன், 49 பந்து) அவுட்டானார். கடைசி பந்தில் 'ஓவர் த்ரோ' வகையில் 5 ரன் இந்தியாவுக்கு கிடைத்தன. பாண்ட்யா 11 ரன் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் மட்டும் எடுத்தது. புவனேஷ்வர் (5), முகமது ஷமி (0) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் அப்ரிதி 3, ஹசன் அலி 2 விக்கெட் சாய்த்தனர்.

துபாய்:பாகிஸ்தானுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் மட்டும் எடுத்தது. கேப்டன் கோஹ்லி 57 ரன்கள் எடுத்தார்.'டி-20' உலக கோப்பை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை