அலுவலக குத்தகை தேவை அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
அலுவலக குத்தகை தேவை அதிகரிப்பு

இந்தியாவில் உள்ள ஆறு முன்னணி நகரங்களில் அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுத்திருப்பது, இந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில் கணிசமாக அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.‘கோவிட்- – 19’ பாதிப்பு காரணமாக ரியல் எஸ்டேட், அலுவலக குத்தகை உள்ளிட்ட பல துறைகளில் பாதிப்பு உண்டானது.


இந்நிலையில், இந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில், பெங்களூரு, ஐதராபாத், புனே உள்ளிட்ட ஆறு முன்னணி நகரங்களில் அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பது, 89 சதவீதம் அதிகரித்திருக்கிறது என, ‘கூலியர்ஸ்’ நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்ந்த நகரங்களில் அலுவலக இடம் குத்தகை தேவை அதிகரித்திருப்பதாகவும், ஐதராபாத் இந்த பட்டியலில் முதலில் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பெரும்பாலான ஊழியர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில், நிறுவனங்கள் அலுவலக செயல்பாட்டை முழு வீச்சில் துவங்குவதில் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக, அலுவலக இடப்பரப்பு தேவையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள் பராமரிக்கப்படும் இடங்கள் மற்றும் குறுகிய கால குத்தகை அடிப்படையிலான இடங்களையும் அதிகம் நாடுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மூலக்கதை