புதுக்கட்சி துவங்க அமரீந்தர் சிங் முடிவு: பா.ஜ., வுடன் கூட்டணி வைக்கவும் திட்டம்

தினமலர்  தினமலர்
புதுக்கட்சி துவங்க அமரீந்தர் சிங் முடிவு: பா.ஜ., வுடன் கூட்டணி வைக்கவும் திட்டம்

சண்டிகர் :பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் புது கட்சி துவங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில், கடந்த சில மாதங்களாகவே முதல்வர் அமரீந்தர் சிங் , முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக நவ்ஜோத் சிங் சித்து சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இருப்பினும், அமரீந்தருக்கும், சித்துவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வந்தது.


இந்நிலையில், 'அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதையடுத்து பா.ஜ.,வில் இணைப்போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அமிரீந்தர்சிங் விரைவில் தனிக்கட்சி துவங்கிடவும், தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திப்பது எனவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் புதுக்கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அமரீந்தர் சிங்கின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

சண்டிகர் :பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் புது கட்சி துவங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை