யோகாவில் உலக சாதனை: கும்மிடிப்பூண்டி மாணவன் அசத்தல்

தினகரன்  தினகரன்
யோகாவில் உலக சாதனை: கும்மிடிப்பூண்டி மாணவன் அசத்தல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தபால் தெரு பகுதியை சேர்ந்த தம்பதி பிரபு, கலைச்செல்வி. இவர்களது மகன் ஹரிஷ்கண்ணா(9). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். மேலும், அங்குள்ள ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயின்று வருகிறான். இந்நிலையில், தரையில் தலையை வைத்து, தலை மீது கால்களை வைக்கும் சலபாசனம் தொடர்ந்து 45 நிமிடங்கள் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.மாணவனின் இந்த சாதனையானது `இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் `ஆவ்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து சாதனை படைத்த மாணவனையும் அவருக்கு பயிற்சி அளித்துவரும் யோகா பயிற்றுனர் சந்தியாவையும் கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும், மாணவனின் சாதனை தொடர தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மூலக்கதை