‘ஓஹோ’ ஓமன்: உலக கோப்பையில் கலக்கல் | அக்டோபர் 17, 2021

தினமலர்  தினமலர்
‘ஓஹோ’ ஓமன்: உலக கோப்பையில் கலக்கல் | அக்டோபர் 17, 2021

அல் அமராத்: பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் ஜதிந்தர் சிங், அகிப் இலியாஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க ஓமன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது.

எமிரேட்ஸ், ஓமனில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. ஓமனில் நடந்த முதல் சுற்றுக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஓமன், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஓமன் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

பப்புவா நியூ கினியா அணிக்கு டோனி உரா (0), லெகா சியாகா (0) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் ஆசாத் வாலா (56) அரைசதம் கடந்தார். சார்லஸ் அமினி (37) ஒத்துழைப்பு தர, பப்புவா நியூ கினியா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்தது. ஓமன் சார்பில் ஜீஷன் மக்சோத் 4 விக்கெட் கைப்பற்றினார்.

 

சுலப இலக்கை விரட்டிய ஓமன் அணிக்கு ஜதிந்தர் சிங், அகிப் இலியாஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். ஓமன் அணி 13.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜதிந்தர் (73 ரன், 42 பந்து, 4 சிக்சர், 7 பவுண்டரி), இலியாஸ் (50 ரன், 43 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர். ஓமனின் ஜீஷன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மூலக்கதை