வங்கதேசம் அதிர்ச்சி தோல்வி: ஸ்காட்லாந்து அணி அபாரம் | அக்டோபர் 17, 2021

தினமலர்  தினமலர்
வங்கதேசம் அதிர்ச்சி தோல்வி: ஸ்காட்லாந்து அணி அபாரம் | அக்டோபர் 17, 2021

அல் அமராத்: ஸ்காட்லாந்துக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் ஏமாற்றிய வங்கதேச அணி 6 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

ஓமன், எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை நடக்கிறது. ஓமனில் நடந்த முதல் சுற்றுக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

ஸ்காட்லாந்து அணிக்கு கேப்டன் கைல் கோட்சர் (0) ஏமாற்றினார். மாத்யூ கிராஸ் (11) நிலைக்கவில்லை. ஜார்ஜ் முன்சே (29) ஆறுதல் தந்தார். ரிச்சி பெர்ரிங்டன் (2), மைக்கேல் லீஸ்க் (0), மேக்லியோட் (5) சோபிக்கவில்லை. மார்க் வாட் (22), கிறிஸ் கிரீவ்ஸ் (45) கைகொடுக்க ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 140 ரன் எடுத்தது. சபியான் ஷரிப் (8), பிராட் வீல் (1) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் மெகிதி ஹசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (5), சவுமியா சர்கார் (5) ஏமாற்றினர். சாகிப் அல் ஹசன் (20), முஷ்பிகுர் ரஹிம் (38), கேப்டன் மகமதுல்லா (23) ஓரளவு கைகொடுத்தனர். கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்டன. ஷரிப் வீசிய 20வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 17 ரன் மட்டும் கிடைத்தன. வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மெகிதி ஹசன் (13), சைபுதின் (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஸ்காட்லாந்து சார்பில் பிராட் வீல் 3 விக்கெட் கைப்பற்றினார்.

மூலக்கதை