சிக்கலில் வங்கதேச அணி * இன்று ஓமனுடன் பலப்பரீட்சை | அக்டோபர் 18, 2021

தினமலர்  தினமலர்
சிக்கலில் வங்கதேச அணி * இன்று ஓமனுடன் பலப்பரீட்சை | அக்டோபர் 18, 2021

மஸ்கட்: ‘டி–20’ உலக கோப்பைக்கு முன்னேற கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது வங்கதேச அணி.

எமிரேட்ஸ், ஓமனில் ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் முதல்சுற்றில் (தகுதிச்சுற்று) வங்கதேச அணி ‘ஏ’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியாவுடன் இடம் பெற்றுள்ளது. 

தனது முதல் போட்டியில் வங்கதேச அணி, ஸ்காட்லாந்திடம் 6 ரன்னில் தோற்றது. இன்று இரண்டாவது போட்டியில் ஓமன் அணியை அதன் சொந்தமண்ணில் எதிர்கொள்கிறது. இதில் வென்றால் மட்டுமே அக். 23ல் துவங்கும் ‘சூப்பர்–12’ சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை இன்று தோற்கும் பட்சத்தில் ‘டி–20’ உலக கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி வெளியேற நேரிடும். 

மறுபக்கம் ஓமன் அணி தனது முதல் போட்டியில் பப்புவா நியூ கினியாவை 10 விக்கெட்டில் சாய்த்த உற்சாகத்தில் உள்ளது. இன்று வங்கதேசத்தை சாய்த்தால், ‘டி–20’ உலக தொடரின் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தலாம்.

மூலக்கதை