அமெரிக்காவில் அதிரடி: நீரவ் மோடி, கூட்டாளிகள் மனு தள்ளுபடி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் அதிரடி: நீரவ் மோடி, கூட்டாளிகள் மனு தள்ளுபடி

வாஷிங்டன்: இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பி சென்றனர். நீரவ் மோடி தற்போது இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து, அமெரிக்காவில் மறைமுகமாக 3 நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்களை நீரவ் மோடியும், அவரது கூட்டாளிகள் மிகிர் பன்சாலி, அஜய் காந்தி ஆகியோர் சேர்ந்து மோசடி செய்து விட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.112 கோடி இழப்பீடு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நீரவ் மோடியும், 2 கூட்டாளிகளும் மனு தாக்கல் செய்தனர். இது நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

மூலக்கதை