தங்கம் பவுன் ₹72 அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம் பவுன் ₹72 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை இன்று காலை பவுனுக்கு ரூ. 72 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

சில நாட்களில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி உயர்வையும் சந்தித்து வந்தது. இதனால் நகை வாங்குவோரிடையை ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டு வந்தது.

எங்கே நகை வாங்கினால், மறுநாள் குறைந்து விடுமோ?. என்ற ஏக்கமும் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,465க்கும், பவுனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு பவுன் ரூ. 35,720க்கு விற்கப்பட்டது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும்.

அதனால், சனிக்கிழமை விலையே அன்றைய தினம் விற்பனையானது.
 
இந்த நிலையில் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.

கிராமுக்கு ரூ. 9 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,456க்கும், பவுனுக்கு ரூ. 72 குறைந்து ஒரு பவுன் ரூ. 35,648க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்களில் பவுன் ரூ. 472 குறைந்தது.

இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் இன்று காலை கிராமுக்கு ரூ. 9 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 4,465க்கும், பவுனுக்கு ரூ. 72 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 35,720க்கும் விற்கப்பட்டது.

.

மூலக்கதை