கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம்

புதுடெல்லி: கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமான சேவையானது இன்று முதல் 100 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

பல நாடுகளுக்கு விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. உள்நாட்டு விமானங்கள் கடந்த ஏப்ரல் முதல் குறைந்தபட்ச அளவில் இயக்கப்பட்டன.

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால், உள்நாட்டு  விமான சேவை 85 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமானங்கள் சேவைகள் 100 சதவீதம்  அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சர்வதேச  விமான சேவைகள் இன்னும் 100 சதவீதம் அமலுக்கு வரவில்லை.

இன்றைய நிலையில் இந்தியாவில் இருந்து சுமார் 33 நாடுகளுக்கு செல்வதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உள்நாட்டு  விமானங்கள் 100 சதவீதம் வரை இயங்க அனுமதிக்கப்பட்டாலும், கொரோனா  தொற்று பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கொரோனா விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

உள்நாட்டு விமானங்கள், நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம். ஆனால் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும்.

விமான நிலையத்திற்கு நுழையும்போது, முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். உடல் வெப்பநிலை கட்டாயம் பின்பற்றப்படும்.

அதில், அனுமதிக்கப்பட்ட ெவப்பத்தை காட்டிலும் கூடுதல் உடல் வெப்பம் இருந்தால், அவர்கள் வெளியேற்றப்படுவர். பயண நேரத்திற்கு முந்திய 72 மணி நேர ஆர்டிபிசிஆர் சோதனை ரிசல்ட் சமர்பிக்க வேண்டும்.

ஆரோக்யா சேது ஆப்ஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழை காட்ட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை