வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கடந்த சில வாரங்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள்.

புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 20 முதல் அடுத்த சில நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய கேரள மலை பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன.

பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை