'பை' மதிப்பின் 1,560 தசம எண்களை கூறி 6 வயது இந்திய சிறுமி சாதனை

தினமலர்  தினமலர்
பை மதிப்பின் 1,560 தசம எண்களை கூறி 6 வயது இந்திய சிறுமி சாதனை

சிங்கப்பூர் : 'பை' மதிப்பின், 1,560 தசம எண்களை மனப்பாடம் செய்து கூறியதன் வாயிலாக, சிங்கப்பூர் நாட்டின் சாதனை புத்தகத்தில், 6 வயதான இந்திய சிறுமி இடம்பிடித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தம்பதியரான சண்முகம் - வெண்ணிலா முனுசாமியின் மகள் இஷானி, 6, சிங்கப்பூர் நாட்டின் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.கணிதத்தில் இடம்பெறும், பை என்பதன் மதிப்பு, 3.14 ஆகும். எனினும், இது, 'ரவுண்ட் ஆப்' செய்யப்பட்ட மதிப்பு.

இந்நிலையில், இந்த பை மதிப்பில் உள்ள, 1,560 தசம எண்களை மனப்பாடம் செய்து 10 நிமிடங்களில் ஒப்பித்து இஷானி அசத்தி உள்ளார். இஷானியின் இந்த சாதனையை, 'சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பின் அதிகாரிகள் நேரில் பார்த்து அங்கீகரித்தனர். ஏற்கனவே 2018ம் ஆண்டு சான்சி சூரஜ் என்ற சிங்கப்பூர் மாணவி 1,505 தசம எண்களை கூறி செய்த சாதனையை, தற்போது இஷானி முறியடித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு, பை மதிப்பில் உள்ள, 70 ஆயிரம் தசம எண்களை பார்க்காமல் கூறி, இந்தியாவை சேர்ந்த ராஜ்வீர் மீனா, 21, என்ற இளைஞர் கின்னஸ் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் : 'பை' மதிப்பின், 1,560 தசம எண்களை மனப்பாடம் செய்து கூறியதன் வாயிலாக, சிங்கப்பூர் நாட்டின் சாதனை புத்தகத்தில், 6 வயதான இந்திய சிறுமி இடம்பிடித்துள்ளார்.தென்கிழக்கு ஆசிய

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை