மாரத்தான் போட்டி

தினகரன்  தினகரன்
மாரத்தான் போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூரில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை வலியுறுத்தி நம்ம திருவள்ளூர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 200 பேர் கலந்துகொண்டனர். போட்டிக்கு தீபன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குனர் தீபன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் விஜயராஜ், ஜெகதீஷ், ரோட்டரி சங்க தலைவர் சரவணகுமார், அரசு ஒப்பந்ததாரர் பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர். வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகள், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

மூலக்கதை