முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா ?: WHO குழு வரும் 26ம் தேதி கூடி இறுதி முடிவு!!

தினகரன்  தினகரன்
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா ?: WHO குழு வரும் 26ம் தேதி கூடி இறுதி முடிவு!!

ஜெனீவா : கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு அக் 26ம் தேதி கூடுகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்காக உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் வேண்டி தேவையான ஆவணங்களை அந்நிறுவனம் ஏற்கனவே அளித்துவிட்டது. கடந்த செப் 27ம் தேதி கோவாக்சின் தரப்பில் கூடுதல் தரவுகள் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்து வரும் உலக சுகாதார அமைப்பு, கோவாக்சினை அங்கீகரிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்காக ஏற்பாடு செய்த கூட்டத்தை 2 முறை தள்ளி வைத்து இருந்தது. இறுதியாக வரும் 26ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூடி கோவாக்சீனுக்கு அவசர கால அனுமதி வழங்குவது குறித்து இறுதி முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளது. ஒரு வேளை கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைத்தால் அந்த தடுப்பூசியை 2 தவணை போட்டுக் கொண்ட அனைவரும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு சென்று வர எந்த தடையும் இருக்காது. 

மூலக்கதை