யோகாசன போட்டி பரிசளிப்பு விழா

தினமலர்  தினமலர்
யோகாசன போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி ; புதுச்சேரி யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடந்த மாநில யோகாசன போட்டியில் வென்றவர்களுக்கு நேரு எம்.எல்.ஏ., சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், மாநில யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.பாரம்பரிய யோகா, கலை யோகா, ரித்தமிக் யோகா ஆகிய பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடந்தது.சங்கத் துணைத் தலைவர் தேவசேனா பவனானி, லலிதா சண்முகம் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் டாக்டர் பாலாஜி வரவேற்றார்.போட்டியில் வெற்றி பெற்று தேசியளவில் பங்கு பெறும் போட்டியாளர்களை, நேரு எம்.எல்.ஏ., பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.துணை தலைவர் கஜேந்திரன், கோதாவரி, பொருளாளர் சண்முகம், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.யோகா நடுவர்கள், மூத்த யோகா வல்லுனர்கள் கவுரவிக்கப்பட்டனர். பொதுச் செயலாளர் தயாநிதி, துணை செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினர்.

புதுச்சேரி ; புதுச்சேரி யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடந்த மாநில யோகாசன போட்டியில் வென்றவர்களுக்கு நேரு எம்.எல்.ஏ., சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை