குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயம் ஒப்படைப்பு

தினமலர்  தினமலர்
குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயம் ஒப்படைப்பு

திருவொற்றியூர் : குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்களுக்கு, போலீசார், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன், 36. தனியார் கூரியர் நிறுவன ஊழியர். அவர் மனைவி, ஷோபனா, 34. இந்த தம்பதிக்கு, இரு பிள்ளைகள் உள்ளனர்.கணேஷ், மார்ச் மாதம், 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.இது தெரியாத மனைவி, நேற்று முன்தினம் மாலை, வீட்டை சுத்தம் செய்த போது, அந்த கவரை எடுத்து, குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.வீட்டிற்கு வந்த கணவர், வளையல் கவரை கேட்ட போது, குப்பை தொட்டியில் போட்டதாக கூறியதும் அதிர்ச்சியடைந்தவர், சாத்தாங்காடு காவல் நிலையத்தில், தங்க நாணயம் மாயமானது குறித்து புகார் அளித்தார்.

இது குறித்து, துாய்மை பணி மேற்கொள்ளும் ராம்கி, தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, குப்பை தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்ற ஊழியர், தங்க நாணயத்தை மீட்டு, மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.துாய்மை பணி அதிகாரிகள், தங்க நாணயத்தை சாத்தாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ்வரியிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு, 4.5 லட்சம் ரூபாய் என தெரிகிறது.உடனடியாக பாதிக்கப்பட்ட நபர்களை வரவழைத்து, தங்க நாணயத்தை சரி பார்த்த பின், அதை பத்திரமாக மீட்டு கொடுத்த துாய்மை பணியாளர்கள் கையாலே தம்பதியிடம், நேற்று மதியம், போலீசார் வழங்க செய்தனர்.

குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை மீட்டு, போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைத்த, துாய்மை பணியாளர்களுக்கு, தங்கத்தின் உரிமையாளர்கள், போலீசார், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருவொற்றியூர் : குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்களுக்கு, போலீசார், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை