இந்தியா-இலங்கை ராணுவம் கூட்டுப் பயிற்சி நிறைவு

தினமலர்  தினமலர்
இந்தியாஇலங்கை ராணுவம் கூட்டுப் பயிற்சி நிறைவு

கொழும்பு-இந்தியா மற்றும் இலங்கை ராணுவத்தின் 12 நாள் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது.

இந்தியா, இலங்கை ராணுவத்தினர் இடையே எட்டாவது கூட்டுப் பயிற்சி இலங்கையில் நடந்தது. கடந்த 4ம் தேதி துவங்கிய இந்த 12 நாள் கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள, நம் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து நம் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்த கூட்டுப் பயிற்சியில் நம் ராணுவத்தின் 120 வீரர்கள் பங்கேற்றனர். பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பான பயிற்சியில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டனர்.இந்த பயிற்சி இரு நாட்டு ராணுவத்தின் திறமை, வீரர்களின் திறன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இது பெரிதும் உதவும். மேலும் இரு நாட்டுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதாகவும் இந்த பயிற்சி அமைந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பு-இந்தியா மற்றும் இலங்கை ராணுவத்தின் 12 நாள் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது.இந்தியா, இலங்கை ராணுவத்தினர் இடையே எட்டாவது கூட்டுப் பயிற்சி இலங்கையில் நடந்தது. கடந்த 4ம் தேதி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை