நாளை தொடங்குகிறது 7வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் வரும் 24ம் தேதி மோதுகிறது..!!

தினகரன்  தினகரன்
நாளை தொடங்குகிறது 7வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா  பாகிஸ்தான் வரும் 24ம் தேதி மோதுகிறது..!!

துபாய்: டி20  உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும்  அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெறுகிறது.கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை முதன் முறையாக இந்தியா வென்றது.மேலும், 2009ம் ஆண்டு பாகிஸ்தான், 2010-ம் ஆண்டில் இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் 2012ம் ஆண்டு, 2014ம் ஆண்டு இலங்கையும் கோப்பையை வென்றன. இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் இடைவெளியில் நாளை 7-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 24ம் தேதி தொடங்குகின்றன.இதனையடுத்து, குரூப் சுற்றின் முதலாவதாக ஓமன்-பப்புவா நியூகினி அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெறவுள்ளது. நடைபெற உள்ளது. குரூப் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் 24ம் தேதி மோதுகின்றது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதனிடையே இத்தொடரில்  இந்திய அணி  புதிய ஜெர்ஸியில் விளையாடு உள்ளது .எனவே இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. அதோடு வருகின்ற 18-ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது .

மூலக்கதை