தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலையில் அதிரடி சரிவு: இன்று காலையில் பவுன் 400 குறைந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீபாவளி நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலையில் அதிரடி சரிவு: இன்று காலையில் பவுன் 400 குறைந்தது

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை இன்று காலை அதிரடி சரிவை சந்தித்தது. இன்று காலை பவுனுக்கு ரூ. 400 குறைந்தது.

இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

சில நாட்களில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி உயர்வையும் சந்தித்து வந்தது. இதனால் நகை வாங்குவோரிடையே ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டு வந்தது.

எங்கே நகை வாங்கினால், மறுநாள் குறைந்து விடுமோ?. என்ற ஏக்கமும் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 13ம் தேதி ஒரு பவுன் ரூ. 35632க்கு விற்கப்பட்டது.

14ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

அன்றைய தினம் கிராமுக்கு ரூ. 73 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 4527க்கும், பவுனுக்கு ரூ. 584 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 36,216க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

15ம் தேதி(நேற்று) தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ. 12 குறைந்து ஒரு கிராம் ரூ. 4515க்கும், பவுனுக்கு ரூ. 96 குறைந்து ஒரு பவுன் ரூ. 36,120க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது.

கிராமுக்கு 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 4465க்கும், பவுனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு பவுன் ரூ. 35720க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை ரூ. 36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கி உள்ளது. வழக்கமாக சனிக்கிழமையன்று காலையில் என்ன விலையில் தங்கம் விற்கிறதோ?, மாலையிலும் அதே விலையில் தான் விற்பனையாவது வழக்கம்.அதனால், இன்றைய காலை விலையே மாலையில் விற்பனையாகும். நாளை ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும்.

அதனால், சனிக்கிழமை விலையிலேயே நாளை தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

தீபாவளி அடுத்த மாதம் 4ம் தேதி வருகிறது. அதற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது.

தீபாவளி நேரத்தில் நகை வாங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்க நினைப்போருக்கு கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை