எல்லையில் கட்டட பணி; சீன ராணுவம் தீவிரம்

தினமலர்  தினமலர்
எல்லையில் கட்டட பணி; சீன ராணுவம் தீவிரம்

புதுடில்லி,: லடாக்கில், எல்லைக் கோட்டிற்கு அருகே, சீன ராணுவம் கட்டடங்கள் கட்டி வருவதால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டு, லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது நடந்த மோதலில், இந்திய ராணுவத்தினர், 21 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 35 பேர் இறந்ததாக, அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது.
இதையடுத்து, எல்லையில் இரு தரப்பும் படைகளை குவித்தன. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, இந்தியா-சீனா வெளியுறவு துறை, துாதரகம் மற்றும் ராணுவ தளபதிகள் இடையே பல கட்ட பேச்சு நடந்தது. இதைத் தொடர்ந்து, கல்வான் எல்லையின் சில பகுதிகளில் இருந்து இரு தரப்பு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

எனினும், சில இடங்களை விட்டு சீன ராணுவம் இன்னும் வெளியேறாமல் உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் இரு தரப்பு ராணுவ தளபதிகள் இடையே நடந்த பேச்சு தோல்வி அடைந்தது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த ஆண்டு மோதல் நடந்த பகுதியில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில், எல்லைக் கோட்டிற்கு அருகே, சீனா கட்டடங்களை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால், எல்லையில், எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்து சீன ராணுவம் இப்போதைக்கு வெளியேறாது என, தெரிகிறது.

அப்படியே சமரச பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, சீன ராணுவம் வெளியேறினாலும், போர் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள வசதியாக, இந்த கட்டடங்களை சீனா கட்டுவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையின் தலையங்கத்தில் 'இந்தியா, தன் விருப்பத்திற்கேற்ப எல்லையை பெற முடியாது; இந்தியா போர் தொடுத்தால் நிச்சயம் தோல்வியை சந்திக்கும்' என, கூறப்பட்டுள்ளது.லடாக் எல்லையில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால், அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புதுடில்லி,: லடாக்கில், எல்லைக் கோட்டிற்கு அருகே, சீன ராணுவம் கட்டடங்கள் கட்டி வருவதால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.nsimg2867086nsimg கடந்த ஆண்டு, லடாக்கில், கல்வான்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை