பிரிட்டனுக்கான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது மத்திய அரசு

தினமலர்  தினமலர்
பிரிட்டனுக்கான கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது மத்திய அரசு

புதுடில்லி,:பிரிட்டன் பயணியருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு அறிவித்துஉள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், விமானப் பயணத்திற்கு, 72 மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை. பிரிட்டன் சென்று இறங்கியதும், 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. 'கோவிஷீல்டு' தடுப்பூசியை முழுமையாக போட்டிருந்தாலும், அதை பிரிட்டன் ஏற்க மறுத்தது.


அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பிரிட்டன் பயணியருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விமானம் ஏறுவதற்கு முன் ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை, 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் போன்ற விதிகள் அறிவிக்கப்பட்டன.இதனால் அதிர்ந்துபோன பிரிட்டன் அரசு, இந்திய பயணியருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கடந்த வாரம் திரும்பப் பெற்றது. கோவிஷீல்டு தடுப்பூசியையும் அங்கீகரிப்பதாகவும் அறிவித்தது.பிரிட்டன் அரசு நம் வழிக்கு வந்துஉள்ளதால், பிரிட்டன் பயணியருக்கு கட்டுப்பாடுகளை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, மத்திய அரசும் திரும்பப்பெற்று உள்ளது.

புதுடில்லி,:பிரிட்டன் பயணியருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு அறிவித்துஉள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் செல்லும் இந்தியர்கள்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை