கேஜிஎப் யஷ் போல் மாஸை கிளப்பும் பிரஜின்!

தினமலர்  தினமலர்
கேஜிஎப் யஷ் போல் மாஸை கிளப்பும் பிரஜின்!

சின்னத்திரையில் பிரபல நடிகராக இருப்பவர் பிரஜின். வெள்ளித்திரையில் பெரிய நடிகராக வேண்டும் என்பதை கனவாக கொண்ட அவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அது அவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்று தரவில்லை. அதேசமயம் சின்னத்தம்பி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பிரஜினுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை பெருகியது. இதனையடுத்து மீண்டும் வெள்ளித்திரையில் நுழைந்த பிரஜின் தற்போது 'குன்றத்திலே குமரனுக்கு' 'நினைவெல்லாம் நீயாடா' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு கதாநாயகனுக்கான அனைத்து அம்சங்களும் கொண்ட பிரஜின் அண்மையில் ஒரு த்ரோபேக் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதைபார்க்கும் ரசிகர்கள் 'சீரியலில் நடித்த பிரஜினா இது? கேஜிஎப் புகழ் யஷ் போன்று மாஸ் ஹீரோ மாதிரி இருக்காரே' என ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

மூலக்கதை