அம்மாவாக போகும் செய்தியை இண்ஸ்டாவில் பகிர்ந்த சீரியல் நடிகை!

தினமலர்  தினமலர்
அம்மாவாக போகும் செய்தியை இண்ஸ்டாவில் பகிர்ந்த சீரியல் நடிகை!

சின்னத்திரை பிரபலமான சசிகலா நாகராஜன் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மிக முக்கிய தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். பிற தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் இவருக்கு சீரியல் வாய்ப்புகள் குவிந்தன. குலதெய்வம், யாரடி நீ மோகினி ஆகிய தொடர்களில் நடித்து நடிகையாகவும் திறமையை நிரூபித்தார். சசிகலா என்றென்றும் புன்னகை தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சசிகலா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட சசிகலாவுக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை