வளர்ச்சியை தடுக்கும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாடு

தினமலர்  தினமலர்
வளர்ச்சியை தடுக்கும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாடு

புதுடில்லி:வாகன பாகங்கள் தயாரிப்பு துறை வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 17 – -20 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என, தர நிர்ணய அமைப்பான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

‘செமிகண்டக்டர் சிப்’ தட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி வருவாய் சரிவு ஆகியவற்றின் காரணமாக, இத்துறையின் வளர்ச்சி சரிவைக் காணும் என, இக்ரா தெரிவித்துள்ளது. பொருட்களின் தயாரிப்பு, கடந்த ஆண்டு நிலையுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பதாக இருந்தாலும், கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக, நிலைமை மிக மோசமானதாக இருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, செயல்பாட்டு லாப வரம்பு வழக்கமான அளவில் இருந்து குறைவாகவே நடப்பு நிதியாண்டில் உள்ளது.அடுத்த சில மாதங்களில் ஏற்றுமதியை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், செமிகண்டக்டர் பிரச்னைகள் இல்லாவிட்டால், இன்னும் நன்றாக இருக்கும்.இன்னும் குறைந்தபட்ச கால அளவுக்காவது, செமிகண்டக்டர் தட்டுப்பாடு சவாலான ஒன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்கும், அது கார் தயாரிப்பு நிறுவனத்தின் கைக்கு வருவதற்கும் இடையே பல அடுக்கு வினியோகஸ்தர்கள் இருப்பதால், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வர ஆறு மாத காலம் வரை ஆகிறது.இவ்வாறு இக்ரா தெரிவித்துள்ளது.

மூலக்கதை