வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு: ஐ.நா., கவலை

தினமலர்  தினமலர்
வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு: ஐ.நா., கவலை

நியூயார்க்: ‛‛கொரோனா பாதிப்பு காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன,'' என்று ஐ.நா., பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா பாதிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசியதாவது:

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது. 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது. சில கோடி பேருக்கு சுத்தமாக இல்லை. சுகாதார பராமரிப்பு இல்லை. அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பு இல்லை.

உலகம் 5 முதல் 6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும், வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன. வலுவான பொருளாதார நாடுகள் மீட்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீத அளவுக்கு மீட்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. ஆனால், குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகள், சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் தான் முதலீட்டுக்காக ஒதுக்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நியூயார்க்: ‛‛கொரோனா பாதிப்பு காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன,'' என்று ஐ.நா., பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.nsmimg890388nsmimgஅமெரிக்காவின்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை