டிராவிஸ் ஹெட் சாதனை: இரட்டை சதம் விளாசல் | அக்டோபர் 13, 2021

தினமலர்  தினமலர்
டிராவிஸ் ஹெட் சாதனை: இரட்டை சதம் விளாசல் | அக்டோபர் 13, 2021

அடிலெய்டு: ஒருநாள் போட்டியில் இரண்டு முறை இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரரானார் டிராவிஸ் ஹெட்.

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் ஒருநாள் தொடரான மார்ஷ் கோப்பை நடக்கிறது. அடிலெய்டில் நடந்த லீக் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா அணி (391/8, 48 ஓவர்) 67 ரன் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி குயீன்ஸ்லாந்து (312/10, 40.3 ஓவர்) அணியை வீழ்த்தியது.

 

இப்போட்டியில் பேட்டிங்கில் அசத்திய தெற்கு ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிராவிஸ் ஹெட், 127 பந்தில், 8 சிக்சர், 28 பவுண்டரி உட்பட 230 ரன் விளாசினார். இது, ஒருநாள் போட்டி அரங்கில் இவரது 2வது இரட்டை சதம். ஆறு ஆண்டுகளுக்கு முன் (2015) சிட்னியில் நடந்த மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா சார்பில் விளையாடிய இவர், 202 ரன் (120 பந்து, 12 சிக்சர், 20 பவுண்டரி) எடுத்திருந்தார். இதன்மூலம் ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் இரண்டு முறை இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்தார். தவிர இவர், ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் டி‘ஆர்க்கி ஷார்ட் (257 ரன், எதிர்: குயீன்ஸ்லாந்து, 2018) உள்ளார்.

மூலக்கதை