‘டாப்–5’ பட்டியலில் கோஹ்லி: ரஷித் கான் தேர்வு | அக்டோபர் 13, 2021

தினமலர்  தினமலர்
‘டாப்–5’ பட்டியலில் கோஹ்லி: ரஷித் கான் தேர்வு | அக்டோபர் 13, 2021

துபாய்: ரஷித் கான் தேர்வு செய்த ‘டாப்–5’ சர்வதேச ‘டி–20’ வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளனர்.

எமிரேட்ஸ், ஓமனில் ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை வரும் அக். 17ல் துவங்குகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ‘சுழல்’ வீரர் ரஷித் கான், உலகின் தலைசிறந்த ‘டாப்–5’ சர்வதேச ‘டி–20’ வீரர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, ஓய்வு பெற்ற தென் ஆப்ரிக்க ‘பேட்டர்’ டிவிலியர்ஸ், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விண்டீஸ் ‘ஆல்–ரவுண்டர்’ போலார்டு இடம் பெற்றுள்ளனர்.

 

இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில், ‘‘பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்கி இந்தியாவுக்கு வெற்றி தேடித்தரும் தகுதி கோஹ்லியிடம் உள்ளது. நெருக்கடியான நேரத்தில் எந்த ஒரு இலக்கையும் எளிதாக ‘சேஸ்’ செய்யும் திறமை போலார்டு, ஹர்திக் பாண்ட்யாவிடம் காணப்படுகிறது. டிவிலியர்ஸ் மிகவும் அபாயகரமான ‘பேட்டர்’. உலகின் தலைசிறந்த பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு ரன் சேர்க்கக்கூடியவர். இவரை போன்ற வீரர் அணியில் இருப்பதை எந்த ஒரு கேப்டனும் விரும்புவர். வில்லியம்சனின் அமைதி மிகவும் பிடிக்கும்,’’ என்றார்.

மூலக்கதை