கனடா கிரிக்கெட் இயக்குனர்: துரியா ஷபிர் தேர்வு | அக்டோபர் 13, 2021

தினமலர்  தினமலர்
கனடா கிரிக்கெட் இயக்குனர்: துரியா ஷபிர் தேர்வு | அக்டோபர் 13, 2021

டொரன்டோ: கனடா கிரிக்கெட் போர்டின் இயக்குனராக துரியா ஷபிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் துரியா ஷபிர், 54. இளம் பருவத்திலேயே கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்தார். துவக்க வேகப்பந்துவீச்சாளர், மிடில் ஆர்டர் பேட்டராக ஜொலித்தார். 1986ல் தமிழக சீனியர் அணியில் இடம் பிடித்தார். 1992 வரை மாநில, தேசிய கிரிக்கெட் தொடர்களில் விளையாடினார். படிப்பிலும் கெட்டியான இவர், பி.காம்., சி.ஏ., முடித்தார்.  

 

கடந்த 2000ல் கனடாவின் டொரன்டோவுக்கு இவரது குடும்பம் சென்றது. இங்கும் இவரது கிரிக்கெட் ஆசை தொடர்ந்தது. 2012ல் கனடா அணியில் வாய்ப்பு பெற்றார். 2012ல் நடந்த ஐ.சி.சி., அமெரிக்க தகுதிச் சுற்றில் விளையாடினார். 2013ல் ஐ.சி.சி., பெண்கள் ‘டி–20’ உலக கோப்பை தகுதிச்சுற்றில் பங்கேற்று அசத்தினார். 2016ல் கனடா அணியின் கேப்டன் ஆனார்.

 

பின் கனடா கிரிக்கெட் வளர்ச்சி, நிர்வாக பணிகளில் ஈடுபட்டார். கனடா பெண்கள் கிரிக்கெட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பெண்கள் அணியை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றினார். இரண்டு விக்கெட் நட்பு தொடர் உட்பட பல்வேறு கிரிக்கெட் தொடர்களை நடத்தினார். அடுத்த தலைமுறை வீராங்கனைகளை தயார் செய்வதில் மும்முரமாக உள்ளார். தற்போது கனடா கிரிக்கெட் போர்டின் இயக்குனராக(பெண்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

மூலக்கதை