பாம்பை ஏவி மனைவியை கொன்ற குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் 17 ஆண்டு சிறை: கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
பாம்பை ஏவி மனைவியை கொன்ற குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் 17 ஆண்டு சிறை: கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேந்தவர் விஜயசேனன். அவரது மகள் உத்ரா (25). இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த சூரஜ்க்கும் (27) கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. கடந்த வருடம் மே 7ம் தேதி பாம்பு கடித்ததாக கூறி உத்தரா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். உத்ராவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று அவரது தந்தை விஜயசேனன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் சூரஜ் தான் சொத்துக்கு ஆசைப்பட்டு பாம்பை ஏவி உத்ராவை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சூரஜை போலீசார் கைது செய்தனர்.  போலீசாரிடம் அவர் அளித்த வாக்கு மூலத்தில், ‘சொத்துக்காக உத்ராவை கொலை செய்ததாகவும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷிடம் இருந்து பாம்பை வாங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும்’ கூறினார். இதையடுத்து  சுரேசையும்  போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கொல்லம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ், குற்றவாளிக்கு தண்டனையை அறிவித்தார். ‘சூரஜ் மீது கொலை, கொலை முயற்சி, துன்புறுத்துதல், ஆதாரங்களை அழித்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் துன்புறுத்தல் மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றத்துக்கு 10 மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனையும், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.* ஏமாற்றம் அளிக்கிறது உத்ராவின் தாயார் கருத்துதீர்ப்பு குறித்து உத்ராவின் தாயார் மணிமேகலை கூறியதாவது: எனது மகளை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கருதியிருந்தேன். ஆனால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது எனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. எப்படி இருந்தாலும் மகள் திருப்பி வரமாட்டாள் என்று எனக்கு தெரியும். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றார்.

மூலக்கதை