டூப்ளிகேட் ஷாருக்கான்களுக்கு வந்த புது சிக்கல்

தினமலர்  தினமலர்
டூப்ளிகேட் ஷாருக்கான்களுக்கு வந்த புது சிக்கல்

பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். சமீபத்தில் அவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் தன் மகன் மீது கவனம் வைத்து வளர்க்கவில்லை என அவரது ரசிகர்களிடையே ஒரு பிரிவினர் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஷாருக்கான் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ராஜு என்பவருக்கும், ஹைதர் மக்பூல் என்பவருக்கும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஷாருக்கான் போலவே நடித்து ஆடி பார்வையாளர்களை கவர்ந்து அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வந்தார்கள். இந்த நிலையில் ஆர்யன்கான் விவகாரத்தில் ஷாருக்கான் தற்சமயம் நெகட்டிவ் கமெண்டுகளை சந்தித்து வருவதால் இந்த இருவரையும் தங்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறி விட்டனராம். கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கில் இருந்து தற்போதுதான் மீண்டும் வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் இது என்னடா புது சோதனை என இருவரும் புலம்பி வருகின்றனர்.

மூலக்கதை