ஓடிடியில் வெளியாகிறது ஓ மணப்பெண்ணே

தினமலர்  தினமலர்
ஓடிடியில் வெளியாகிறது ஓ மணப்பெண்ணே

தாராளபிரபு, கசடதபற படங்களுக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம் ஓ மணப்பெண்ணே. ப்ரியா பவானி சங்கர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். 2016-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக் இது.

இந்த படத்தின் பணிகள் முடிந்து பல மாதங்களுக்கு முன்பே வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது கொரோனா பிரச்சினை முடிந்து வருவதால் படத்தை தியேட்டரில் வெளியிடுவதா? ஓடிடி தளத்தில் வெளியிடுவதா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

ஒவ்வொரு வாரமும் அதிக படங்கள் வெளிவருவதால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. படம் அக்டோபர் 22ம் தேதி என்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை