பிரான்சில் கோர விபத்து: தண்டவாளத்தில் உறங்கிய அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் பலி

தினமலர்  தினமலர்
பிரான்சில் கோர விபத்து: தண்டவாளத்தில் உறங்கிய அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் பலி

பாரீஸ்: பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகர் பியாரிட்ஸ். இது பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான வழித்தடமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள், இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.


பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6:00 மணிக்கு இந்த தண்டவாளத்தில் வந்த ரயில் அவர்கள் மீது ஏறியது. இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு கால் உடைந்தது. இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாரீஸ்: பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார்.nsimg2866795nsimgபிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை