பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட இந்தியா அழைப்பு

தினமலர்  தினமலர்
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட இந்தியா அழைப்பு

நுர் - சுல்தான்: ''பருவ நிலை மாற்றம், கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளது போல, பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட்டு போராட வேண்டும்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆசிய நாடுகளான கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஆர்மேனியா ஆகியவற்றுக்கு நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கிர்கிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன் தினம் கஜகஸ்தான் வந்து சேர்ந்தார்.கஜகஸ்தான் தலைநகர் நுர் - சுல்தானில் ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: அமைதி மற்றும் வளர்ச்சி தான் நம் பொதுவான கொள்கை என்றால், பயங்கரவாதம் என்ற மிகப் பெரிய எதிரியை நாம் வெல்ல வேண்டும்.ஒரு நாட்டிற்கு எதிராக மற்றொரு நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை அனுமதிக்கக் கூடாது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை துாண்டுவது ஒரு நாட்டிற்கு அழகு அல்ல; அது பயங்கரவாதத்தின் மற்றொரு வடிவம்.


கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்கள், பருவ நிலை மாற்றப் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்துள்ளது போல, பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடவும் ஒன்றுபட வேண்டும்.குறுகிய கால ஆதாயத்திற்காக பயங்கரவாதம், மதவாதம், வன்முறை, இனவெறி ஆகியவற்றை துாண்டுகின்றனர். அவை ஒருநாள், துாண்டியவரையே பதம் பார்த்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் பயங்கரவாதத்தை துாண்டும் பாக்., குறித்தும், பாக்., ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளாதார வழித் தடம் அமைக்கும் சீனா பற்றியும் பெயர் குறிப்பிடாமல் ஜெய்சங்கர் பேசினார்.

ரஷ்ய அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு


வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டின் இடைவெளியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரவ்வை, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவை வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தான், இந்தோ - பசிபிக் பிரச்னைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். கஜகஸ்தானில் இருந்து ஆர்மேனியா செல்லும் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அராரத் மிர்ஸோயன் மற்றும் பிரதமர் நிகோல் பஷின்யான் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

நுர் - சுல்தான்: ''பருவ நிலை மாற்றம், கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளது போல, பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட்டு போராட வேண்டும்,'' என, வெளியுறவுத் துறை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை