ஷபாலி வர்மா ‘நம்பர்–2’ | அக்டோபர் 12, 2021

தினமலர்  தினமலர்
ஷபாலி வர்மா ‘நம்பர்–2’ | அக்டோபர் 12, 2021

துபாய்: ‘டி–20’ தரவரிசையில் ஷபாலி வர்மா, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்கள் ‘டி–20’ போட்டிகளில் சாதித்தவர்களுக்கான தரவரிசை (‘ரேங்க்’) பட்டியல் வெளியானது. சிறந்த ‘பேட்டர்’ வரிசையில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா, 726 புள்ளிகள் மட்டும் பெற்று முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

10 புள்ளிகள் அதிகமாக பெற்ற ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (754), ‘நம்பர்–1’ வீராங்கனை ஆனார். ஆஸ்திரேலிய தொடரில் 3 போட்டியில் ஒரு அரைசதம் உட்பட 70 ரன் எடுத்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (709) ஒரு இடம் முன்னேறி, மூன்றாவது இடம் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மற்ற வீராங்கனைகள் மேக் லான்னிங் (698), நியூசிலாந்தின் சோபி (692) 54, 5 வது இடம் பெற்றனர்.

‘ஆல் ரவுண்டர்’ வரிசையில் சோபி (நியூசி.,), நடாலியே சிவர் (இங்கிலாந்து), கேத்தரின் (ஸ்காட்லாந்து) முதல் மூன்று இடத்தில் உள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா 4 வது இடம் பெற்றார்.

பவுலர்கள் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி, 5வதாக உள்ளார்.

மூலக்கதை