கொரோனா தொற்றை கையாள்வதில் இங்கிலாந்து அரசு தவறு செய்துள்ளது: நாடாளுமன்ற விசாரணை குழு அறிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்றை கையாள்வதில் இங்கிலாந்து அரசு தவறு செய்துள்ளது: நாடாளுமன்ற விசாரணை குழு அறிக்கை

லண்டன்:  கடந்த ஆண்டு கொரோனா தொற்றை முன்கூட்டியே கையாளுவதில் இங்கிலாந்து அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தவறு செய்துள்ளதாக நாடாளுமன்ற குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சுகாதாரம் மற்றும் சமூக நல கமிட்டி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கமிட்டி இணைந்து அரசு கொரோனா தொற்றை கையாண்டது தொடர்பான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையில், ‘கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவலை கையாளுவதில் அபாயகரமான அணுகுமுறையை இங்கிலாந்து அரசு மேற்கொண்டுள்ளது. கிழக்காசிய நாடுகளை போன்று விரைவான லாக்டவுன் மற்றும் மிகப் பெரிய அளவிலான கொரோனா பரிசோதனைகளை செய்ய தவறிவிட்டது. அதற்கு மாறாக மக்கள் மந்தையாக கூடியதால் தொற்றை தவிர்க்க முடியாமல் போய்விட்டது. இதன் விளைவாக நாடு முழுவதும் நோய் வேகமாக பரவியது. அரசின் இந்த தவறான கொள்கை காரணமாக அதிக அளவிலான கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அரசு தரப்பில் மறுத்தாலும், நாடாளுமன்ற விசாரணை குழுவினர் ‘அரசின் தவறான கொரோனா தடுப்பு கொள்கையே மரணங்கள் அதிகரிக்க காரணம் என்று வலியுறுத்தியுள்ளது.

மூலக்கதை