காகித தொல்லையிலிருந்து விடுபடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
காகித தொல்லையிலிருந்து விடுபடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

புதுடில்லி:தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்கள், இனி தங்களுடைய வாடிக்கையாளர்களின் விண்ணப்ப படிவங்களை ‘டிஜிட்டல்’ மயமாக்கிக் கொள்ளலாம் என, தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.


இதையடுத்து, நிறுவனங்கள் தங்கள் சந்தாதாரர்களின் தரவை புதுப்பிப்பது என்பது எளிதாகிவிடும்.அத்துடன் இன்னொரு பெரிய நிம்மதி, இனி கட்டுக்கட்டாக காகித விண்ணப்ப படிவங்களை கிடங்குகளில் சேகரித்து, பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது என்பது தான்.

இது குறித்து தொலைத்தொடர்பு துறையின் அறிக்கையில், இனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விண்ணப்ப படிவங்களை கலரில் ஸ்கேன் செய்து, டிஜிட்டல் வடிவில் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

மேலும் நிறுவன சேவையை பெறுவதிலிருந்து விலகியவர்களின் படிவத்தை, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்காவது பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மூலக்கதை