‘இந்தியாவின் சீர்திருத்த கொள்கைகள் மிகவும் வெற்றிகரமாக உள்ளன’

தினமலர்  தினமலர்
‘இந்தியாவின் சீர்திருத்த கொள்கைகள் மிகவும் வெற்றிகரமாக உள்ளன’

பாஸ்டன்:அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல் நாளில், அங்கிருக்கும் உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பேசிஉள்ளார்.


அந்த வரிசையில், தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான ஏ.டிசி., எனும், ‘அமெரிக்க டவர் கார்ப்ப ரேஷன்’ நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் எட்மண்டு டிசான்டோவையும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின், எட்மண்டு டிசான்டோ கூறியதாவது:இந்தியா மேற்கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்த கொள்கைகள், மிகவும் வெற்றிகரமாக உள்ளன என்று நான் கருதுகிறேன்.முதலீட்டை ஊக்குவிப்பது குறித்து அவர்கள் கருத்தில் கொள்ளும் சீர்த்திருத்தங்களைநாங்கள் வரவேற்கிறோம்.

இந்திய அரசின் அணுகு முறையால் ஏற்படும் முன்னேற்றத்தை, இன்னும் சில ஆண்டுகளில் நாம் காணலாம்.ஏ.டி.சி., துணை நிறுவனமான ‘ஏ.டி.சி., இந்தியா’வுக்கு, கிட்டத்தட்ட 76 ஆயிரம் செல்போன் டவர்கள் இந்தியாவில் உள்ளன. அடுத்து மேலும் 4 ஆயிரம் டவர்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை