நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் அமேசானுடன் 'பியூச்சர்' முயற்சி

தினமலர்  தினமலர்
நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் அமேசானுடன் பியூச்சர் முயற்சி

புதுடில்லி:'பியூச்சர்' குழுமமும், 'அமேசான்' நிறுவனமும் தங்களது வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாக, சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'ரிலையன்ஸ் ரீடெய்ல்' நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை விற்பனை வணிகங்கள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்டவற்றை 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டில் மேற்கொண்டது.ஆனால், இதற்கு தடைகோரி அமேசான் நிறுவனம், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றம் சென்றது.


இந்திய நீதிமன்றங்களிலும் இரு நிறுவனங்களும் முறையீடுகளை மேற்கொண்டன. ஓராண்டுக்கும் மேலாக வழக்கு இழுத்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது சமரச ஏற்பாட்டுக்கு வந்துள்ளன.ரிலையன்ஸ் தரப்பில் இருந்தும் இவ்விவகாரத்தை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு, பியூச்சர் நிறுவனத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து, இம்முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மூலக்கதை