35 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
35 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா குந்தனா அருகே பீயாபிதிய காரஹள்ளியில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பயிற்சி மையம் உள்ளது. இங்கு கடந்த 11-ந்தேதி மேகாலயாவில் இருந்து 365 வீரர்கள் பயிற்சிக்கு வந்தனர். அவர்களில் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 35 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த பயிற்சி மையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மேலும் 35 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அத்துடன் அவர்களுடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை