என்னை பள்ளிக்கு செல்ல அனுமதியுங்கள் - ஆப்கான் சிறுமி வேண்டுகோள் விடுத்த வீடியோ வைரல்

தினகரன்  தினகரன்
என்னை பள்ளிக்கு செல்ல அனுமதியுங்கள்  ஆப்கான் சிறுமி வேண்டுகோள் விடுத்த வீடியோ வைரல்

காபூல்: என்னை தயவு செய்து பள்ளி செல்ல அனுமதியுங்கள் என வலியுறுத்தி ஆப்கானை சேர்ந்த சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோ பேசுபொருளாகியுள்ளது. தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பிறகு பெண் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஆப்கான் சிறுமி ஒருவர் பேசும் வீடியோவை அந்நாட்டு செய்தியாளர் பிலால் சர்வாரி பகிர்ந்துள்ளார்.அதில் பெண்களின் கல்வி உரிமையை பறிக்காதீர் என தலிபான்களை கேட்டுக்கொள்ளும் சிறுமி நான் உணவு உண்டு வீட்டிலேயே முடங்கிக்கொள்ள பிறப்பெடுக்கவில்லை. நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என கூறுகிறார். பெண்களுக்கு கல்வி கிடைக்காமல் ஒரு நாடு எப்படி முன்னேற முடியும் என சிறுமி கேட்கும் கேள்விக்கு தலிபான்கள் செவிமடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை