‘டுவென்டி–20’ உலக கோப்பை: வெளியானது ‘தீம்’ பாடல் | செப்டம்பர் 23, 2021

தினமலர்  தினமலர்
‘டுவென்டி–20’ உலக கோப்பை: வெளியானது ‘தீம்’ பாடல் | செப்டம்பர் 23, 2021

துபாய்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான ‘தீம்’ பாடலை ஐ.சி.சி., வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடக்க இருந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை 7வது சீசன், எமிரேட்ஸ், ஓமனில் வரும் அக். 17ல் துவங்குகிறது. இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ விண்டீஸ் உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் பைனல், வரும் நவ. 14ல் துபாயில் நடக்கவுள்ளது.

ஓமனில் வரும் அக். 17ல் நடக்கவுள்ள முதல் சுற்றுக்கான முதல் போட்டியில் ஓமன், பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. ‘சூப்பர்–12’ சுற்றில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை (அக். 24, துபாய்) சந்திக்கிறது. இத்தொடருக்கான அதிகாரப்பூர்வ ‘தீம்’ பாடலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ளது.

இது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல், ஐ.சி.சி., மற்றும் பி.சி.சி.ஐ.,யின் சமூகவலைதளத்தில் வெளியானது. ‘லிவ் தி கேம்’ என்று துவங்கும் இப்பாடலை, பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்தார். இதில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, விண்டீஸ், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ‘ஆல்–ரவுண்டர்களான’ முறையே போலார்டு, மேக்ஸ்வெல், ரஷித் கான் ஆகியோரது ‘அனிமேஷன்’ இடம் பெற்றுள்ளது.

மூலக்கதை