ஊடகங்களுக்கு கசியும் தகவல்கள் அலறும் ‘ஆப்பிள்’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
ஊடகங்களுக்கு கசியும் தகவல்கள் அலறும் ‘ஆப்பிள்’ நிறுவனம்

புதுடில்லி:‘ஆப்பிள்’ நிறுவனத்தை பொறுத்தவரை, சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளித்து வருவது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் நிறுவன செயல்பாடுகள் குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு கசிவதும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், ஊழியர்களுக்கு கடுமையான ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.அதில், ஊடகங்களுக்கு தகவல்களை கசிய விடும் ஊழியர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

அண்மையில், ‘வெர்ஜ்’ எனும் ஊடகம், நிறுவனத்தின் சுற்றறிக்கை ஒன்றை பொது வெளியில் அப்படியே வெளியிட்டது.இதற்கு முன்னரும் அலுவலகத்தினுள் நடைபெறும் கலந்துரையாடல்கள் வெளியே கசியவிடப்பட்டுள்ளன.தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நாள், அலுவலக மீட்டிங்குகள் என பல தகவல்கள் வெளியே கசிவதை அடுத்து, டிம் குக் இவ்வாறு எச்சரித்திருக்கிறார்.

மேலும், இத்தகைய ரகசிய தகவல்களை கசியவிடுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்து உள்ளார்.ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ‘ஐபோன் 13’ குறித்த தகவல்கள், அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன் வெளியே கசிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை