வருமான வரி தாக்கல் தொடரும் சிரமங்கள்

தினமலர்  தினமலர்
வருமான வரி தாக்கல் தொடரும் சிரமங்கள்

புதுடில்லி:வருமான வரி இணைய தளத்தை அணுகுவதில், சிலர் தொடர்ந்து சிரமங்களை அனுபவித்து வருவதாக, ‘இன்போசிஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இப்பிரச்னைகளை களைந்து, பயனர் அனுபவத்தை மேலும் எளிதாக்க, வருமான வரி துறையினருடன் இணைந்து விரைவாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கலை எளிமையாக்கும் வகையில், புதிய இணையதளம் கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டது. புதிய இணைய தளத்தை உருவாக்குவதற்கான பணிகள் இன்போசிஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன், லட்சக்கணக்கான பயனர்களால் அதில் உள்நுழைய முடியவில்லை. மேலும், வருமான வரித் தாக்கலில் ஏராளமான சிக்கல்களையும் சந்தித்தனர். இதையடுத்து, இப்பிரச்னைகளை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.இருப்பினும், நிலைமை முழுமையாக சரியாகவில்லை. பலர் இன்னும் வரி தாக்கல் செய்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில வாரங்களாக பயனர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும், பயனர்களின் சிரமங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை