அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வாஷிங்டன் : அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களுடனும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை வாஷிங்டனில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்த கமலா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கோவிட் வேகமாக பரவிய போது, அதனை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், தடுப்பூசி போடும் பணியையும் வேகப்படுத்தியதை கண்டு அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. கோவிட் காலத்தில் இருநாடுகளும் ஒன்றாக இணைந்து வைரசுக்கு எதிராக போராடின. கோவிட் பரவலின் ஆரம்ப கட்டத்தில், உலகின் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கிய நாடு இந்தியா.

பருவநிலை மாற்றத்தை இந்தியா தீவிரமாக எடுத்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து செயலாற்றும் போது, உலகில் பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.


அமெரிக்காவுக்கு நன்றி: மோடி


பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: கோவிட் இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டபோது, எங்களுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக அமெரிக்காவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள வலிமையான மற்றும் துடிப்பான மக்கள் இரு நாட்டிற்கு இடையே பாலமாக விளங்குகின்றனர். அவர்களின் பங்களிப்பும் பாராட்டத்தக்கவை. இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையிலேயே கூட்டாளிகள்; எங்களுக்கு ஒத்த மதிப்புகள், புவிசார் அரசியல் நலன்கள் பல உள்ளன. மேலும் எங்களுக்கு இடையே, ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கமலா இந்தியா வர வேண்டும்


அமெரிக்காவின் துணை அதிபராக உங்கள் (கமலா ஹாரிஸ்) தேர்வு ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள். அதிபர் பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ், இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என நான் நம்புகிறேன். கமலாவின் வருகைக்காக இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நேரத்தில், இந்தியா வரும்படி நான் உங்களை அழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வாஷிங்டன் : அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை