ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு தடை போடுவார்களா இந்திய மகளிர்: இன்று 2வது ஒருநாள் ஆட்டம்

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு தடை போடுவார்களா இந்திய மகளிர்: இன்று 2வது ஒருநாள் ஆட்டம்

மெக்கே: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தலா 3  ஒருநாள், டி20 தொடர்களிலும், ஒரு டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது.மெக்கேவில் செவ்வாய்கிழமை நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி மகளிர்  9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றனர். இந்திய தரப்பில் கேப்டன் மிதாலி ராஜ் மட்டுமே அரை சதத்தை கடந்தார். கூடவே ஆரம்பத்தில் யாஷ்டிகா பாட்டியா, கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ், ஜூலன் கோஸ்வாமி  ஆகியார் சுமாராக விளையாடினர். பந்து வீச்சிலும் ஜூலன் தான் கவனிக்க வைத்தார். மற்றவர்கள் பொறுப்புடனோ,பொறுமையுடனோ விளையாட வில்லை.அதனை சரியாக பயன்படுத்திக்  கொண்ட கேப்டன் மேக் லானிங் தலைமையிலான ஆஸி வீராங்கனைகள்   பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தினார்கள். அதனால் தொடர்ந்து 25வது ஆட்டத்தில் வெல்ல தகுதியானவர்கள் என்று நிரூபித்தார்கள். அதனால் ஆஸி அணியில் மாற்றமின்றி இன்று மெக்கேவில் நடைபெற உள்ள 2வது ஒருநாள் ஆட்டத்தில் 26வது வெற்றிக்கு முனைப்புக் காட்டும். ஆனால் இந்திய அணியில் கட்டாயம் மாற்றம் இருக்கும். அறிமுக வீராங்கனைகளில் ஒருவர் உட்கார வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அறிமுக வீராங்கனைகள் யாஷ்டிகா, ரிச்சா, மேக்னா மூவரும் சிறப்பாகவே விளையாடினர். அதே நேரத்ததில் வெற்றி அவசியம் என்பதால் அனுபவ வீராங்கனைகளுக்கு  ஓய்வு தரக்கூடும்.அப்படி மாற்றங்களுடன் இந்திய அணி முழு திறமையையும் வெளிப்படுத்தினால் ஆஸியின் தொடர் வெற்றிக்கு தடை போட முடியும்.

மூலக்கதை