ஆக்காசில் இந்தியாவுக்கு இடமில்லை: அமெரிக்கா உறுதி

தினகரன்  தினகரன்
ஆக்காசில் இந்தியாவுக்கு இடமில்லை: அமெரிக்கா உறுதி

வாஷிங்டன்: இந்தோ- பசிபிக் பிராந்தியத்திய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கவும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து, ‘ஆக்கஸ்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கின. இதன் காரணமாக, பிரான்சுடன் ஏற்கனவே செய்திருந்த நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த அமைப்பில் இந்தியா, ஜப்பானை சேர்த்துக் கொள்ளும் ஆலோசனையை அமெரிக்கா நேற்று நிராகரித்தது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி கூறுகையில், ‘‘இந்தோ -பசிபிக் பிராந்திய பாதுகாப்பிற்கான கூட்டணியில்  வேறு எந்த நாடுகளும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கும் செய்தி அனுப்பி இருக்கிறோம். இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை கூட்டணியில் சேர்க்கும் திட்டமும் அமெரிக்காவுக்கு இல்லை,” என்றார்.

மூலக்கதை